செத்துப்போனவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக எடுப்பார்கள். ஆனால், கவர்ச்சிக்கன்னி சன்னிலி லியோன் வாழ்க்கையை அவரை வைத்தே இணை யத்தில் தொடராக வெளியிடுகிறார்கள்.

சன்னி லியோன் ஏன் ஆபாச படங்களில் நடிக்கவேண்டிய முடிவை எடுத்தார் என்பதை அவருடைய குழந்தைப் பருவ வாழ்க்கையாக எடுத்து முடித்தார்கள். இனி, அவரு டைய வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை எடுக்கப் போகிறார்கள்.

sunnylenon

""எனது கதையைப் படமாக எடுக்கப்போவதாக சொன்னபோது நான் முதலில் மறுத்தேன். ஆனால், எனது கணவர் இந்தக் கதையை படமாக எடுக்கலாம் என்றார். மொத்த யூனிட்டின்முன் எனது கதையை அப்பட்டமாக எடுப்பது சாத்தியமா என்று எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், நடந்ததைத்தானே எடுக்கிறோம் என்று எனது கணவர் என்னுடைய சங்கடத்தை போக்கினார்.

முதலில் சினிமாவாக எடுக்கத்தான் திட்டமிட்டார்கள்.

ஆனால், அதில் நிறைய விஷயங்களைச் சொல்ல முடியாது என்பதால் இணையத் தொடராக எடுத்தோம். முதல் பகுதி நிறையபேரை ரீச்சாகியிருக்கிறது. இரண்டாம் பகுதி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நினைப்பதாக'' சன்னி லியோன் கூறுகிறார்.

ஆபாச வீடியோக்களை எடுத்து வெளியிட்டு இணையத்தின் மூலமே பெரிய அளவில் சம்பாதித்தவர் சன்னி லியோன். இப்போது மீண்டும் இணையத்தைப் பயன்படுத்தி, அவருடைய இளமை சரிவதற்குள் வாழ்க்கைக் கதை என்ற பெயரில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருக் கிறார்.

ஆனால், இந்தத் தொடரின் படப்பிடிப்பு முடிந்த ஒவ்வொரு நாளும் கண்ணீர்விட்டு அழுததாக சன்னி லியோன் கூறியிருப்பதுதான் சங்கட்டமா இருக்கு.

Advertisment