Advertisment

மகேந்திரனுக்கு எதிரான சதி! -நினைவஞ்சலிக் கூட்டத்தில் அம்பலமான உண்மை!

/idhalgal/cinikkuttu/plot-against-mahendran

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக, மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தின் துணைத் தலைவரான டைரக்டர் "யார்' கண்ணன். கடந்த 15-ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் டைரக்டர்கள் கே. பாக்கியராஜ், வி. சேகர், மனோஜ்க

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக, மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தின் துணைத் தலைவரான டைரக்டர் "யார்' கண்ணன். கடந்த 15-ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் டைரக்டர்கள் கே. பாக்கியராஜ், வி. சேகர், மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ராதாரவி, நாசர், மைக் மோகன் உட்பட ஏராளமான திரைப் பிரபலங்களும், பத்திரிகை உலக பிரபலமான நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களும் கலந்துகொண்டனர்.

Advertisment

d

""காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுது'' என்ற பாடல் வரிகளை, மகேந்திரன் ஃபோட்டோவுடன் கூடிய ஃப்ளக்ஸ் பேனரில் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. வந்திருந்த அனைவரும் மகேந்திரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலிலி செலுத்திய பின், ஒவ்வொருவராக மகேந்திரனின் டைரக்ஷன் சாதனைகளையும் அவருடனான நட்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நக்கீரன் ஆசிரியர் பேசும் போது, ""அண்ணன் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படமும், மணிரத்னத்தின் "மௌனராகம்' படமும் ரஷ்ய பட விழாவில் கலந்துகொள்ள போட்டி போட்டன. "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம்தான் ரஷ்யாவுக்கு போயிருக்கணும். ஆனால், இங்கே நடந்த சதியால் "மௌனராகம்' போனது. அப்போது ரொம்பவும் மனசு உடைஞ்சு போனார் அண்ணன் மகேந்திரன். தமிழ் ஈழத்தில் தம்பி பிரபாகரனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தவர் மகேந்திரன். அதைப் பத்தி பதிவு பண்ணுங் கண்ணேன்னு அடிக்கடி சொல்வேன். மத்தவங்க மாதிரி அதை வியாபாரம் ஆக்க விரும்பல கோபால்னு சொல்லிலிட்டார். இப்ப என்னடான்னா பிரபாகரனுடன் இருப்பது மாதிரி மார்ஃபிங் ஃபோட்டோவை வச்சுக்கிட்டு எத்தனையோ பேர் அலப்பறை பண்ணிக்கிட்டிருக்கான்'' என்று டச்சிங்காகவும் டயமிங்காகவும் பேசினார்.

Advertisment
cine300419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe