Advertisment

ப்ளீஸ் என்னை... -டைரக்டரிடம் கெஞ்சிய ஹீரோயின்!

/idhalgal/cinikkuttu/pleasing-me-hearing-heroine

ஜெ.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் "தொட்ரா.' இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Ad

ஜெ.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் "தொட்ரா.' இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Advertisment

இந்தப் படத்தில், வீணாவின் அண்ணனாக, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ். குமார் அறிமுகமாகிறார். இவர் வேறுயாருமல்ல; இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர்தான்..

Advertisment

heroine

இந்தப்படம் செப்-7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில புதிய தகவல்களை படக் குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

""இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்தக் காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார்.

இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்தக் காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா...

ஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளைப் படமாக்கும் போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாறமுடியவில்லையாம்.. அதற்காகவே இயக்குனர் மதுராஜிடம் அடிக்கடி சென்று ""ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்'' என கேட்டாராம். ""இது என்னடா வம்பா போச்சு.. ""ஒருதடவை அறைஞ்சது குத்தமாய்யா'' என ஜெர்க் ஆன மதுராஜ் "யம்மா ஆள விடு சாமி' என கெஞ்சாத குறையாக நழுவ, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானதாம்.

cine110918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe