"டார்ச் லைட்' இயக்குநர் மஜீத் என்ன சொல்ல வர்றாருன்னா-

""இது ஒரு பீரியட் பிலிம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள்.

photo-shoot

ஆனால் நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவுசெய்து படமாக்கினேன், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். சதா, ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இங்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் மும்பை சென்று "ஏ' சான்றிதழ் பெற்றுள்ளேன்'' என்கிறார்.

Advertisment