Advertisment

செம மாஸ் பொங்கல்! பேட்ட -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/petta-review

துரையில் பேட்ட வேல் என்ற பெயருடன் முறுக்கு மீசையுடன் வலம்வருகிறார் ரஜினி.

Advertisment

அவரது நண்பன் மாலிலிக்காக சசிகுமார்.

peta

அந்த ஊரின் பெரிய மனிதரான டைரக்டர் மகேந்திரனின் மகளைக் காதலிக்கிறார். மதம் குறுக்கே வருவதால், ரஜினியே முன்னின்று திருமணத்தை நடத்துகிறார். மகேந்திரனின் மகன்களான நவாசுதீன்சித்திக்கும் கஜராஜுவும் மணல் கடத்தும் ஆசாமிகள்.

Advertisment

தங்களது தங்கையின் கல்யாணத்தை நடத

துரையில் பேட்ட வேல் என்ற பெயருடன் முறுக்கு மீசையுடன் வலம்வருகிறார் ரஜினி.

Advertisment

அவரது நண்பன் மாலிலிக்காக சசிகுமார்.

peta

அந்த ஊரின் பெரிய மனிதரான டைரக்டர் மகேந்திரனின் மகளைக் காதலிக்கிறார். மதம் குறுக்கே வருவதால், ரஜினியே முன்னின்று திருமணத்தை நடத்துகிறார். மகேந்திரனின் மகன்களான நவாசுதீன்சித்திக்கும் கஜராஜுவும் மணல் கடத்தும் ஆசாமிகள்.

Advertisment

தங்களது தங்கையின் கல்யாணத்தை நடத்தும் பேட்டமீது கடுப்பாகிறார்கள் அண்ணனும் தம்பியும். தங்கையின் பேரில் சொத்தை எழுதிவைத்ததால் பெத்த அப்பனையே காவு வாங்குகிறார்கள். அதே சாவு வீட்டில் கஜராஜைப் போட்டுத் தள்ளுகிறார் ரஜினி. சசிகுமார் மனைவியின் சீமந்தத்திற்கு வரும் நவாசுதீன், ஒட்டுமொத்த குடும்பத்தையும் குண்டுவைத்துக் கொல்கிறார். இதில் சசிகுமார், ரஜினியின் மனைவி த்ரிஷா, அவர்களது குழந்தை பலியாகிறார்கள். நவாசுதீன் சித்திக்கை என்ன செய்தார் ரஜினி என்பதுதான் "பேட்ட.'

ரஜினியை வெறித்தனமாக ரசித்து படத்தை எடுத்து "பேட்ட'யில் கொடி நாட்டியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியோட மாஸ் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என்ற ஏக்கத்தையும் போக்கியிருக்கிறார் டைரக்டர். காலேஜ் ஹாஸ்டல் வார்டன் காளியாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி. சிம்ரனுக்கும் அவருக்குமான போர்ஷன்களை ஃபுட்டேஜ்ஜால் வெட்டியிருப்பது மட்டும்தான் கொஞ்சம் ஏமாற்றமே தவிர, மற்றபடி சீனுக்கு சீன் நடிப்பில் பொளந்து கட்டியிருக்கார் ரஜினி.

petta

நவாசுதீன் மகனாக விஜய்சேதுபதி என்ட்ரி ஆனதும் களை கட்டுகிறது "பேட்ட.' இடைவேளைக்குப்பின் க்ளைமாக்ஸ் வரை, சீனுக்கு சீன் டெம்பரை ஏத்தி "பேட்ட'-யை ரஜினியின் கோட்டையாக்கி யிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் முக்கால்வாசி சீன்களில் பெரும் கூட்டமே இருந்தாலும், ரஜினியை தனித்துவமாகக் காட்டியதில் கார்த்திக் சுப்புராஜின் உழைப்பு தெரிகிறது. ஒளிப்பதிவாளர் எஸ். திருநாவுக்கரசு, மியூசிக் அனிருத், காஸ்ட்யூம் டிஸைனர்கள் நிகரிஹா பாசின்கான், பிரவீன் ராஜா, எடிட்டர் விவேக் ஹர்சன், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், டான்ஸ் மாஸ்டர்கள் ஷெரிஃப், பாபா பாஸ்கர், சவுண்ட் டிஸைனர் குணால் ராஜன் என யூனிட் மொத்தமும் ரஜினி- கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் "பேட்ட'-க்கும் பக்கா சப்போர்ட்டாக இருக்கிறார்கள்.

cine220119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe