Advertisment

பரியேறும் பெருமாள் - விமர்சனம்

/idhalgal/cinikkuttu/periyarum-perumal-review

திருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக "பரியேறும் பெருமாள்' அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொருமுறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நட

திருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு படமாக "பரியேறும் பெருமாள்' அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். குறிப்பாக தான் அசிங்கப்படும் காட்சிகளில், அதாவது ஒவ்வொருமுறை அவமானப்படுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மொட்டை வெயில்களில் கஷ்டப்பட்டு நடித்தது, அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். கருப்பி என்ற நாயுடன் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் மனதில் பதியும்படியாக இருக்கிறது.

Advertisment

periyerumperumal

படத்தின் தொடக்கம்முதல் இறுதிவரை "கயல்' ஆனந்தி இன்முகத் தோடு வருகிறார். தன்னைச் சுற்றி அசம்பாவித சம்பவங்கள் பல நடந்தாலும் அதையறியாமல், வெகுளித்தனமான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வந்து ரசிக்க வைத்தி ருக்கிறார்.

தாழ்த் தப்பட்டவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை, அவர்களின் வலிகளை, அவர்களின் போராட்டமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அதைச் காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநராக மாரி செல்வராஜ் வெற்றிபெற்றுள்ளார். பா. ரஞ்சித் தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல்களை பதியவைத்து வருகிறார்.

அவரது தயாரிப்பிலும் அது எதிரொலித் திருப்பது கவனிக்கப்பட வேண்டியதுதான். தாழ்த்தப்பட்டவர்கள் மேலே வர, என்னதான் முயற்சி செய்தாலும், மேலே இருப்பவர்கள் அவர்களை கீழே தள்ளதான் முயற்சி செய்வார்கள் என்பதை பதியவைக்கிறார். இது ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், அதுபற்றி அறியாதவர்களின் மனதில் அது தவறாக விதைக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

cine091018
இதையும் படியுங்கள்
Subscribe