"அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மீரா கதிரவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "விழித்திரு' என்னும் படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான திரைக்கதை யுடன் வெளியான இப்படம் ரசிகர் களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/periyaraward.jpg)
விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது, ""தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் நல்ல கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத்துறையிலுள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லா வற்றையும் கடந்து மனிதர்களாக, வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல் வாக்கினை செலுத் திக்கொண்டு இருக்கிறார்.
அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருது கிறேன். இந்த விருதை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்தி ருக்கிறது என்பதை உங்க ளோடு பகிர்ந்து கொள்வ தில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/periyaraward-t.jpg)