திரைப்படத்துறையில், அதிகமாக முதலீடு செய்பவர் களான சினிமா பைனான்சியர் களுக்காக ஒரு அங்கீகரிக்கப் பட்ட சங்கம் ஆரம்பமாகி யிருக்கு. "தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்' (South Indian Film Financiers Association- SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/association.jpg)
""தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத் துறை நன்கு வளர பாடுபடும்'' என்று இச்சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்தார்.
துணைத் தலைவர்- சந்திரப் பிரகாஷ் ஜெயின், பொருளாளர்- அன்புச் செழியன், செயலாளர்- அருண் பாண்டியன் என அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி, ஜஸ்வந்த் பண்டாரி, பங்கஜ் மேத்தா, அபிராமி ராமநாதன், அழகர் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்கள்.
சங்கத்தில் உறுப்பினர்களாக தற்போது 20 சினிமா பைனான்சியர்கள் உள்ளனர்.
ஏகப்பட்ட திட்டங்களுடன் இந்த சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இதுலயும் சங்கட்டம் வராம இருந்தா சரிதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02/association-t.jpg)