ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் "மாயநதி'. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, "ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இசைய மைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர்கள் அமீர், சுப்பிர மணிய சிவா, எஸ்.ஆர். பிரபா கரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் அசோக் தியா கராஜன் பேசும் போது, ""இந்த விழாவின் ஹீரோ யின் இசையமைப்பாளர் பவதாரிணி மேடம்தான். எல்லாப் பாடல்களையும் மிகச் சிறப்பாக தந்துள்ளார். இசை ஞானி இளையராஜா பாடல் கள்தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தின.சந்தோ ஷத்தை அதிகப்படுத்தின. அவர் வீட்டிலிருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றி'' என்றார் .அமீர் பேசும்போது, ""நடிகர் அபிசரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக் கமானவர்கள். உலக வரலாற் றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க் குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.
நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள்தான் பெரிய கலைஞர்கள். இளைய ராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாகப் பதியவேண்டும்.
அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்யவேண்டும். இதையெல்லாம் அரசு செய்யவேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விஷயங் களைச் செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால்... சினிமாதான் இங்கு ஆண்டுகொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை.
கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப் பெயரை மாற்றினார். சினிமா ஆட்கள் உடனே இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறை யிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு திராணி இல்லாத தால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைடல் பார்க்குக்கு கொடுத்துவிட்டார்.
அதுபோல் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு கலைஞர் இடம் ஒதுக்கினார்.
அதுவும் நடக்க வில்லை'' என ஆதங்கப் பட்டார் அமீர்.