Advertisment

மக்களின் ஆதரவு -ஹேப்பி அம்ரீஷ்!

/idhalgal/cinikkuttu/people-support-happy-amrish

"சின்ன மச்சான் செவத்த மச்சான்', "சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் பாப்புலராகியுள்ளது. யூ டியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.

Advertisment

amrish

இதுபற்றிய சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர், தயாரிப்

"சின்ன மச்சான் செவத்த மச்சான்', "சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் பாப்புலராகியுள்ளது. யூ டியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.

Advertisment

amrish

இதுபற்றிய சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ், இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

டி. சிவா பேசும்போது...

amrishஇந்தப் பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்துவிட்டேன்.

அதற்குப் பிறகுதான் அந்தப் பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Advertisment

அந்தப் பாடலை "சார்லி சாப்ளின்-2' படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம்'' என்றார்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- ""அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையைக் கிளப்பி இருக்கு எனும்போது, அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையைக் கிளப்பும்'' என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது... ""இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும் இந்தப் பாடலை ட்விட்மூலம் மேலும் பாப்புல ராக்கிய தனுஷ்க் கும் நன்றி.

பிரபுதேவா எவ்வளவோ டியூனுக்கு விதம்விதமான டான்ஸ் ஆடியிருக்கிறார். வெற்றிபெற்றிருக்கிறார். "சின்ன மச்சான்' பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றிபெற்றிருக்கிறேன்.

prabhudeva

மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து "சார்லி சாப்ளின்-2' படத்தில் இன்னும் நான்கு பாடல்கள் இருக்கு.

அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும் என்று நம்புறேன்.''

இந்த நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜன் கலந்துகொண்டார்.

cine021018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe