Advertisment

தோலை உரிக்கவேண்டும் -ஆவேசமான கவிப்பேரரசு!

/idhalgal/cinikkuttu/peel-skin

சிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை "நெடுநல் வாடை' படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வ கண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலி நாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத் தொகுப்பாளர் மு. காசி விஸ்வநாதன், இசை யமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க் ளின், படத்தை தமிழகமெங

சிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை "நெடுநல் வாடை' படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வ கண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலி நாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத் தொகுப்பாளர் மு. காசி விஸ்வநாதன், இசை யமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க் ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட எஸ் கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழு வினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

Advertisment

v

இயக்குநர் செல்வகண்ணன் பேசியபோது- ""இந்தப்படத்தை என்மீது நம்பிக்கை வைத்து தயாரித்த என் நண்பர்கள் vஅனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது. அய்யா வைரமுத்து அவர்கள் இல்லாவிட்டால் இந்தப்படத்தின் வெற்றி இல்லை'' என்றார்.

Advertisment

கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது- ""தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்குமுன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள்.

இந்தப் பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க் கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரைத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும்தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங் களை சரிப்படுத்ததான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக் கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உறியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உறிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது.

இதைத்தான் "நெடுநல்வாடை' செய்தது'' என ஆவேசமாகப் பேசினார்.

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe