மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம்மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும் புதிய படம் "பதுங்கி பாயணும் தல.' இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது. படத்தின் அறிமுக இயக்குநர் எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் இணை இயக்குநராகவும், இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, சிங்கம்புலி மூவரும் காமெடியில் கலக்க, ஆர்.என்.ஆர். மனோகர், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

Advertisment

audio

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாடலை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட டி. ராஜேந்தர், கயல் சந்திரன் மற்றும் "தல' படங்களின் கேமராமேன் வெற்றி பெற்று கொண்டனர்.