தன்னிடம் வளர்ந்த இளைய மகள் கீர்த்தனாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தினார் ரா. பார்த்திபன். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன்தான் கீர்த்தானாவின் கணவர்.
தன்னிடம் வளர்ந்த இளைய மகள் கீர்த்தனாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தினார் ரா. பார்த்திபன். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன்தான் கீர்த்தானாவின் கணவர். இப்போது சீதாவிடம் வளரும் மூத்த மகளுக்கு ராதாரவியின் உறவுக்காரப் பையனை மாப்பிள்ளையாகப் பேசி முடித்திருக்கிறார் ரா. பார்த்திபன். பிரிந்து வாழும் பார்த்திபனும் சீதாவும் இணைந்து இம்மாத இறுதியில் திருமணத்தை நடத்துகிறார்கள்.
இது ரா. பார்த்தி பனைப் பற்றிய தனிச் செய்தி. மதுராந்தகத்தை அடுத்துள்ள தனது பண்ணை வீட்டில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வருகிறார் பார்த்திபன். இந்தப் பறவைகள் அனைத்துமே பாதாம், பிஸ்தா, முந்திரி வகைகளைத்தான் விரும்பிச் சாப்பிடுமாம். தீபாவளியை முன்னிட்டு கே.கே. நகரில் தனது பெயரிலான மனிதநேய மன்றத்தின் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வேட்டி-சட்டை, இனிப்பு வழங்கி சந்தோஷப்பட்டு, சந்தோஷப்படுத்தியிருக்கிறார் ரா. பார்த்திபன்.