Advertisment

பெற்றோர் Vs குழந்தைகள்!

/idhalgal/cinikkuttu/parents-vs-childrens

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "வானரப்படை' என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "வானரப்படை' என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Advertisment

parents=childrens

அவந்திகா என்னும் சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவந்திகாவும் உடன் நடித்துள்ளார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் ஆகிய ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். ஒன்பது வயதிலிருந்து 11 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமி களின் கள்ளம் கபட மில்லாத கலாட்டா வுக்காக இந்த சிறுவர், சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவு- லோகி. இவர் இயக்குநர் கே.ஆர். இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், எடிட்டிங்- சுரேஷ்அர்ஸ், கலை- A. சண்முகம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M. ஜெயபிரகாஷ். படம் பற்றி இயக்குநர் M. ஜெயபிரகாஷிடம் கேட்டபோது- பெற்றோருக்கும் குழந்தைகளுக் கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளிதான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையே ஏற்படும் மனப்போராட்டங்களைச் சொல்லும் திரைப்படமாக "வானரப்படை' தயாராகி வருகிறது'' என்கிறார் இயக்குநர் எம். ஜெய பிரகாஷ். இவர் கே.ஆர். இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராகப் பணி புரிந்ததுடன் "நேர் எதிர்' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர். நாயகியாக அறிமுகமாகிறார் அவந்திகா.

cin301018
இதையும் படியுங்கள்
Subscribe