Advertisment

போறாளே சிமிட்டல் தாயி...

/idhalgal/cinikkuttu/paoraalae-caimaitatala-taayai

priyavariyar

ற்போதைய சினிமா சூழலில் மாங்குமாங்கென்று உழைத்தாலும் கிடைக்காத மார்க்கெட்டை, ஒரேயொரு கண்சிமிட்டலிலில் வாங்கி யிருக்கிறார் மலையாள நடிகை பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' என்று ஒரு படம். அதில் வரும் 'மாணிக்ய மலராயி பூவி' என்ற பாடலிலில்

priyavariyar

ற்போதைய சினிமா சூழலில் மாங்குமாங்கென்று உழைத்தாலும் கிடைக்காத மார்க்கெட்டை, ஒரேயொரு கண்சிமிட்டலிலில் வாங்கி யிருக்கிறார் மலையாள நடிகை பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' என்று ஒரு படம். அதில் வரும் 'மாணிக்ய மலராயி பூவி' என்ற பாடலிலில் சில விநாடிகளே வந்துபோகும் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்காத குறையாக ஹைப் ஏற்றுகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisment

பல்வேறு கான்செப்டுகளில் பிரபலமாக்கப்பட்ட பிரியா வாரியர், ஒரு கட்டத்தில் சன்னி லியோனின் சாதனையையே முறியடித்தார். கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற அந்த சாதனையில் சன்னியைப் பின்னுக்குத் தள்ளினார் இந்தக் கன்னி.

Advertisment

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஐதராபாத் காவல்நிலையத்தில், இஸ்லாமியர்களின் உணர்வைப் பாதிக்கும் விதமாக அந்த வைரல் பாடல் இருப்பதாகக்கூறி புகார் அளிக்கப்பட்டது. ""இந்தப் புகார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை இதில் பெரிது படுத்த வேண்டாம்'' எனக்கூறி நைசாக கழன்றுகொண்டார் பிரியா.

பிரியாதான் இனி ஹாட் டாபிக் என நம்பி விட்ட படக்குழு, பிரியா விரல் துப்பாக்கியால்- முத்தப் புல்லட்டுகளால் காதலனை சுட்டுத் தாக்கும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. ""இதே சூட்டோடு இருங்க ஃபேன்ஸ்.. நான் பரீட்சை எழுதிட்டு வந்து உங்களை மீட் பண்றேன்'' என்று கூறிவிட்டு, செமஸ்டர் எழுதப் போய்விட்டார் அந்த 'சிமிட்டல் அழகி'.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe