Advertisment

பண்லாமா? வேண்டாமா? -குழப்பத்தில் வாரிசு நடிகை!

/idhalgal/cinikkuttu/panlama-or-not-actress-trouble

"ஹீரோ', "முபாரகன்' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் அதியா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டியின் மூத்த மகள். இவர் மூன்றாவதாக நடித்திருக்கும் "மொட்டிச்சூர் சக்னாச்சூர்' படம் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. நவாசுதீன் சித்திக் நடித்திருக்

"ஹீரோ', "முபாரகன்' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் அதியா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டியின் மூத்த மகள். இவர் மூன்றாவதாக நடித்திருக்கும் "மொட்டிச்சூர் சக்னாச்சூர்' படம் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. நவாசுதீன் சித்திக் நடித்திருக்கும் இந்தப்படம் உட்பட, அதியா நடித்துள்ள மூன்று படங்களிலுமே திருமணமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

Advertisment

""கல்யாணமான கேரக்டரா கிடைக்குதே...? அதுமேல அவ்வளவு ஆசையா?'' என அதியாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, ""அதெல்லாம் வெறும் ரீல்.

zz

ரியல் வாழ்க்கை யில் திருமணம் பற்றி இந்தத் தருணம்வரைக்கும் எதுவும் யோசித்ததே இல்லை. நான் அதற்குத் தயாராகவும் இல்லை. என் வீட்டிலும் திருமணம் செய்துகொண்டு, குடும்பமாக வாழ்வதற்கான நேரத்தை எனக் காக இதுவரை சொன்னதில்லை. நாமெல்லாம் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறோம்.

ஆனால், பூமியிலேயே கட்டிப் போடுகிறார் கள்'' என்று சிரித்தார்.

Advertisment

அதேசமயம், ""காதல் நிச்சயமாக இருக்கவேண்டும்'' என்று சொல்லும் அதியா, அதற்கு தன் அப்பா அம்மா, தாத்தா பாட்டியை எல்லாம் ரெஃபரென்ஸ் கொடுத்து அசரவைக்கிறார்.

அப்படியே "கல்யாணம் ஆனால், கூட்டுக் குடும்பமா? தனிக்குடித்தனமா?' என்று விடாமல் கேட்டதற்கு, ""பெரிய குடும்பமாக, எல்லாருடனும் வாழ்வதென் றால் சந்தோஷம்தான்.

அதற்கு என் வீட்டுக்காரர் ஒத்துவரணுமே...'' என்று குலுங்கிச் சிரிக்கிறார் அதியா.

cini191119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe