புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலைக் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகிவருகிறது "பைரி.' 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில் நடந்த புறா பந்தயங்கள் பற்றி பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இதுகுறித்து தெரியாமலேயே இருந்துவருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்றுவந்த புறா பந்தயத்தை மையமாகவைத்து நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே "பைரி.'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pairy.jpg)
"நாளைய இயக்குநர் சீஸன் 5'-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, "நெடுஞ்சாலை நாய்கள்' என்ற குறும் படத்திற்காக "சீஸன் 5-ன் சிறந்த வசனகர்த்தா' விருது பெற்ற "ஜான் கிளாடி' இத்திரைப் படத்தை இயக்குகிறார். கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்று, "நாளைய இயக்குநர் சீஸன் 3'-ல் முதல் பரிசு வென்று 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத், இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கி றார்கள். ""இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நாகர் கோவிலையும், அதைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்துவருகிறது'' என்கிறார் பி.ஆர்.ஓ. சக்திசரவணன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05/pairy-t.jpg)