வியங்கள்மூலம் உலகளவில் பெயர் பெற்றவர் ஏ.பி. ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளன. தன் திறமையை ஓவியங்கள்மூலம் நிரூபித்த இவர், தற்போது நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.

Advertisment

art

இவர் ஏற்கெனவே "ஆந்திரா மெஸ்' படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

Advertisment

தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் "ஜடா' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்களை கோபப்பட வைப்பதுதான்.

அந்த கோபத்தை பார்ப்பவர் களிடம் ஏற்படுத்தியிருக்கிறார் ஏ.பி. ஸ்ரீதர்.

இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இப்படம் குறித்து ஏ.பி. ஸ்ரீதர் கூறும்போது, ""படத்தைப் பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுகள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும்'' என்கிறார் தன்னடக்கத்துடன்.

Advertisment