நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் "டோரா' இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் ஷான் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
இப்போது "இயக்கி' என்கிற குறும்படத்தின்மூலம் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/direction.jpg)
கால்டாக்சி ஓட்டுபவர்களின் நெகட்டிவான பக்கங்களை மட்டுமே இதுவரை நமக்கு காட்டி, அவர்களின்மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், ஷானின் "இயக்கி' குறும்படம் அதை தகர்த்து, அவர்களும் நம்மில் ஒருவர்தான். அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கின்றன என்கிற நிதர்சனமான உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறது.
"இயக்கி'-யின் இயக்குநர் ஷான் என்ன சொல்றாருன்னா- ""இந்தக் கதையைப் படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுநரானேன்... 500-க்கும்மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக்கொண்டுதான் படமாக்கினேன். பட்டம் படித்துவிட்டு உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து, குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக் கும் அவர்களது வலியைச் சொல்லி மாளாது. கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களுக்கான வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, மனிதாபிமானம் என்ற ஒன்றையே மறந்துபோய் விட்டார்கள். இப்படியே போனால் அடுத்த தலைமுறை அடிமை வாழ்க்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் கள் என்பதுதானே உண்மை... உண்மையை ஊரறியச் சொல்லி இருக்கிறேன். "இயக்கி' மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்கனும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கவேண்டும் இதுதான் என் ஆசை'' என்கிறார் ஷான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/direction-t.jpg)