Advertisment

பேரன்பு' பெரும் எதிர்பார்ப்பு!

/idhalgal/cinikkuttu/paeranapau-paerauma-etairapaarapapau

ram

47-ஆவது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கண்டிப் பாகப் பார்க்கவேண்டிய சிறந்த 20 திரைப்படங்களை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்

ram

47-ஆவது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கண்டிப் பாகப் பார்க்கவேண்டிய சிறந்த 20 திரைப்படங்களை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

Advertisment

இதில் இயக்குநர் ராம் இயக்கத்தில் பி.எல். தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் நடிக்கும் "பேரன்பு' மற்றும் ஜே. சதீஸ்குமார் தயாரிப்பில் ஆன்ட்ரியா, ஜெரிமியா நடித்த "தரமணி' திரைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

"பேரன்பு' திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (world Premiere) 27-ஆம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே (Pathe) திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாகத் திரையிடப் பட்டது. இத்திரைப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பார்வையாளர்கள் கர கோஷம் எழுப்பி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து 28-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது காட்சியும் பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. மெகா ஸ்டார் மம்மூட்டி மற்றும் "தங்கமீன்கள்' சாதனாவின் தத்ரூபமான நடிப்பையும், இப்படைப்பை அழகாக சித்தரித்த இயக்குநர் ராமையும் வெகுவாக பாராட்டினர்.

இயக்குநர் ராம், தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் மற்றும் "தங்கமீன்கள்' சாதனா ஆகியோர் இத்திரைப்பட விழாவில் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe