bharathirajatitle

Advertisment

மிழ்நாட்டில் எந்த சினிமா நடிகராவது அரசியலுக்கு வர வேண்டும் என்றால் சிலரிடம் லைசென்ஸ் வாங்கியே ஆக வேண்டும். வாங்கிய லைசென்ஸை ரினிவலும் பண்ணவேண்டும். இல்லை யென்றால் அந்த நடிகர்களுக்கு எதிராக தமிழின விரோதி, தமிழ்நாட்டு வெகுஜன விரோதி என ஈஸியாக ஸ்டாம்ப் அடித்து விடுவார்கள்.

bharathiraja

இப்படித்தான் ரஜினி அரசியலிலில் நுழைவது உறுதி, தனிக்கட்சி உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் அவருக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ""ஹி இஸ் நாட் எ டமிழன், ஹிஸ் பொலிட்டிக்கல் என்ட்ரி இஸ் வேஸ்ட்'' என்றரீதியில் போட்டுத் தாக்கினார். கிடைத்த மேடைகளில் எல்லாம் ரஜினியை வெளுத்து வாங்கினார்.

Advertisment

rajini

அப்படித்தான் "கடவுள்-2' சினிமாவின் தொடக்க விழா மேடை கிடைத்தது. பக்கத்தில் சீமான் உட்கார்ந்திருந்ததும் பாரதிராஜாவுக்கு வசதியாகப் போச்சு. முதலிலில் மைக்கைப் பிடித்த சீமான், 50 டிகிரி செல்சியஸ் ஹீட்டில் ரஜினியை உண்டு இல்லை என ஆக்கினார்.

ஏற்கெனவே கொதிப்பில் இருந்த பாரதிராஜாவுக்கு இது போதாதா...…

kamal

Advertisment

""ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து சிக்கி சின்னாபின்னமாகியிருக்காரே. ரஜினி, இப்போது அரசியலுக்கு நீ வந்திருக்கிறாய் என்றால் அதற்குக் காரணம், உனது உதட்டசைவுக்கு பாட்டெழுதிய வைரமுத்துதான். ஆண்டாள் விவகாரத்தில் அவனுக்காக நீ குரல் கொடுக்காதது ஏன்? நீயெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறாய்?'' என ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரம் ரஜினியை ஒருமையில் வறுத்தெடுத்தார் பாரதிராஜா.

கடந்த வாரம் பாண்டிச் சேரிக்குப் போனார் பாரதிராஜா. முதல்வர் நாராயணசாமியை சந்தித்து விட்டு வெளியே வந்த பாரதிராஜா, ""ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்திருப்பது மக்களுக்கு நல்லது செய்யத்தான்.

அவர்களது கட்சிக் கொள்கை களை அறிவித்தபின் யாருக்கு ஆதரவு என்பதை நான் அறிவிப்பேன்'' என "நான் சொன்னது போன மாசம், ஆனா இது இந்த மாசம் கிற கதையா, போட்டார் ஒரு போடு.

பலே பாரதிராஜாவின் பலே பல்டிக்குப் பிறகு, இதுல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு மக்களே?

-ஈ.பா. பரமேஷ்