வில் மேக்கர்ஸ் படநிறுவனம் சார்பில் பா. விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் "ஆருத்ரா.' ஸ்ரீதேனாண்டாள் பிலிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்தப் படத்திற்கு, "மெலோடி கிங்' வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ""இந்தப் படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா. விஜய்.

Advertisment

pavijaypavijay

அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால்கூட உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. அதுபோன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்'' என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில், ""இந்தப் படத்தின் கதையை டிரைலரிலேயே பா. விஜய் சொல்லிலிவிட்டார். இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Advertisment

pavijay-heriones

இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதேபோல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.

இந்தப் படத்திற்காக பா. விஜய் உழைத்த உழைப்பு எனக்குதான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை'' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

விழாவில் "ஆருத்ரா'-வின் ஹீரோயின் களான மேஹாலி, சோனி சரிஸ்தா, தக்ஷிதா ஆகியோர் கலக்கலாக கலந்துகொண்டனர். ஆக. 24-ல் ரிலீசாகிறது "ஆருத்ரா.'