"தப்பாட்டம்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் "பப்ளிக் ஸ்டார்' துரைசுதாகர்.

Advertisment

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய "பப்ளிக் ஸ்டார்' இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள வெள்ளை வேட்டி- சட்டை என்று கலக்குகிறார்.

Advertisment

gg

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு- காத்திருந்த "களவாணி 2' படத்தில் வில்லன் அரசியல் வாதி வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகிவரும் "டேனி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Advertisment

"களவாணி-2' படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களேகூட ddddபகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.

எந்த வேடமாக இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் நானும் முத்திரை பதிப்பேன்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரைசுதாகர்.

எழில் இயக்கும் புதிய படம், மற்றும் சில முன்னணி டைரக்டர்களின் படத்திலும் வெயிட்டான ரோலில் கமிட் ஆகியிருக்கிறார் துரை சுதாகர்.

கடந்த 2-ஆம் தேதி "களவாணி-2' புரமோ நிகழ்ச்சி செம ஹிக்கான காஸ்ட்யூமில் வந்து கலக்கினார் ஓவியா. நிகழ்ச்சி யில் பேசிய துரைசுதாகர், ""ஷூட்டிங் ஆரம்பிச்ச சில நாட்களிலேயே ஹீரோ விமல் நல்ல நண்பராகி விட்டார். ஆனா ஓவியா மேடம்கூட பழகுறதுக்கு பயமாயிருந்துச்சு.

அவுங்களே வந்து பேச ஆரம்பிச்சதும் பயம் போயிருச்சு. அதுக்குப்பிறகு நல்லா பழக ஆரம்பிச்சேன். சரண்யா மேடம் எனது நடிப் பைப் பாராட்டி நல்லா வருவீங்க தம்பின்னு ஆசிர்வாதம் பண்ணினார்கள்'' என பூரிப்புடன் பேசினார்.

பரமு

ஸ்டில்ஸ்: எஸ்.பி. சுந்தர்