Advertisment

ஒரிஜினல் ஹீரோயின் அமலா பால்! டூப்ளிகேட் சிக்கல்கள்!

/idhalgal/cinikkuttu/original-heroine-amala-paul-duplicate-problems

டந்த 19-ஆம் தேதி ரிலீசாக வேண்டிய "ஆடை' படத்திற்கு 18-ஆம் தேதி ஃபைனான்ஸ் சிக்கல் வந்ததால், தனது கையிலிருந்து ரொக்கமாக 25 லட்ச ரூபாய் கொடுத்து, படம் ரிலீசாவதற்கு பேருதவி புரிந்தவர் படத்தின் ஹீரோயினான அமலா பால்தான். படம் ஒருவழியாக ரிலீசாகி, சினிமா விமர்சகர்களிடம் நல்ல பா

டந்த 19-ஆம் தேதி ரிலீசாக வேண்டிய "ஆடை' படத்திற்கு 18-ஆம் தேதி ஃபைனான்ஸ் சிக்கல் வந்ததால், தனது கையிலிருந்து ரொக்கமாக 25 லட்ச ரூபாய் கொடுத்து, படம் ரிலீசாவதற்கு பேருதவி புரிந்தவர் படத்தின் ஹீரோயினான அமலா பால்தான். படம் ஒருவழியாக ரிலீசாகி, சினிமா விமர்சகர்களிடம் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றா லும், படத்தின் கலெக்ஷன் என்னவோ டல்லாகத்தான் இருக்கிறது. இதனால் லேசாக கவலைப்பட்டாலும் அடுத்தடுத்த வேலைகளில் உற்சாகமாக இறங்கிவிட்டார் அமலா பால்.

Advertisment

aa

டாக்டர் கே.சி.ஜி. வர்கீஸ் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் துவக்கவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்டார் அமலாபால். ""டி.வி.சேனல் கேமராமேன்கள் அங்கே நிற்கி றார்கள், கொஞ்சம் தலையைத் தூக்கி போஸ் கொடுங்க'' என பி.ஆர்.ஓ. நிகில் முருகன் சொன்னதும், கலகலவென சிரித்தபடி தலையைத் தூக்கி போஸ் கொடுத்தார் அமலா பால்.

ஆபத்பாந்தவியாக இருக்கும் அமலா பால் குறித்து விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசினோம்... ""ஒரிஜினல் ஹீரோயின்னா அமலா பால் தாங்க! சொந்தப் பணம் 25 லட்சத்தை தூக்கிக் கொடுக்க யாருக்கு மனசு வரும்? இதே மாதிரி தனது படங்களுக்குப் பிரச்சினை வரும்போதும் சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவுகிறார் விஜய்சேதுபதி. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது... அது என்னன்னா...

பட ரிலீஸ் நேரத்தில் வரும் இந்தமாதிரி ஃபைனான்ஸ் சிக்கல்களெல்லாம் உண்மையானது தானா? இல்ல டூப்ளிகேட்டான்னு? இதையெல்லாம் ஹீரோக்களும் ஹீரோயின்களும் நன்றாக ஆலோசிக்க வேண்டும்'' என்றார்.

ஆமா... இதுவும் யோசிக்க வேண்டிய சங்கதிதான்!

-நைட்மேன்

Advertisment
cine060819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe