Advertisment

வாய்ப்பு அல்ல வாழ்க்கை -இளம் கேமரா மேனின் அனுபவம்!

/idhalgal/cinikkuttu/opportunity-not-life-camera-experience-camera

மீபத்தில் திரைக்கு வந்த "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின்ராஜ். இவர் தனது 19 வயதிலேயே 'தீதும் நன்றும்' என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரது இரண்டாவது படம்தான் 'இஸ்பேட் ராஜா'. இப்போது வயது 22.

Advertisment

கேமராவைத் தொட்டுக்கூட பார்க்காமல் இருந்த இவருக்கு ம

மீபத்தில் திரைக்கு வந்த "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின்ராஜ். இவர் தனது 19 வயதிலேயே 'தீதும் நன்றும்' என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரது இரண்டாவது படம்தான் 'இஸ்பேட் ராஜா'. இப்போது வயது 22.

Advertisment

கேமராவைத் தொட்டுக்கூட பார்க்காமல் இருந்த இவருக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. தனது ஆர்வத்தாலும் திறமையாலும் வாய்ப்பு அளித்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றித் தன் தகுதியை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

d

இனி அவர் பேசுகிறார்...

""நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிப்பது? எந்தத் துறையில் ஈடுபடுவது என்று எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன். ஓவியம், கலை, சினிமா என்று ஆர்வமாக இருந்தேன். ஆனால், இதில் எதில் முழு ஈடுபாடு காட்டுவது என்று தெரிய வில்லை. நான் சினிமா நிறைய பார்ப்பேன்.

பலவகையான படங்களையும் பார்ப்பேன். இந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா "உனக்கு சினிமா வில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா?' என்றார். சினிமா ஆர்வம் என்பதை அவரிடம் கூறினேன். அவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய ஆசிரியர். கலை ஈடுபாடு இருப்பதால் அப்பா என் ஆர்வத்தைக் கண்டுகொண்டார். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன்.

"நாளைய இயக்குநர் சீசன் 5'-ல் குறும்படம் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றினோம். எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் முதல் படம் "தீதும் நன்றும்' ஒளிப்பதிவு செய்தேன். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை .

அடுத்த படம்தான் "இஸ்பேட் ராஜா.' நான் இந்தப் படத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கை யாகத்தான் பார்த்தேன்.

கதைப்போக்கிற்கு ஏற்ப நான் கையாண்டுள்ள நிறமாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிறபோது, பட்ட கஷ்டங்கள் ஒன்று மில்லை என்று தோன்றுகிறது'' என்று முடித்தார் கவின்ராஜ்.

cine160419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe