Advertisment

உண்மை மட்டும் ப்ளீஸ்!

/idhalgal/cinikkuttu/only-true

ணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலிலியல் தொந்தரவுகளை மி டூ என்கிற ஹேஷ்டேக் உடன் ஏராளமான பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். பல தகவல்கள் நம்மை திக் அடையச் செய்கின்றன.

Advertisment

hemakurushi

சில தகவல்கள் இவுரா இப்டிலாம் பண்ணாரு என்று முகம் சுழிக்கவும் வைத்தன. இந்நிலையில், "உண்மைக்கு மாறான குற்றச்

ணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலிலியல் தொந்தரவுகளை மி டூ என்கிற ஹேஷ்டேக் உடன் ஏராளமான பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். பல தகவல்கள் நம்மை திக் அடையச் செய்கின்றன.

Advertisment

hemakurushi

சில தகவல்கள் இவுரா இப்டிலாம் பண்ணாரு என்று முகம் சுழிக்கவும் வைத்தன. இந்நிலையில், "உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்' என "காலா' புகழ் ஹூமா குரேஷி பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ""ரொம்ப முக்கியமான போராட்டத்தை பொய்க் குற்றச்சாட்டுகளின்மூலம் யாரும் கொச்சைப் படுத்திவிட வேண்டாம் சகோதரிகளே. சும்மா கடலை போட்டதையெல்லாம் அத்துமீறல் என்றாக்காதீர்கள். இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு நாம் யாருக்கும் இடமளிக்கலாம். தயவுசெய்து உண்மையை மட்டுமே வெளியிடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

""சிறுசாப் போச்சு'' -யாஷிகா ஆனந்த்

Advertisment

yashika-anand

"பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த் நடித்த 'நோட்டா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் பேசியபோது... 'நோட்டா' படத்தில் நான் பிக்பாஸுக்கு முன்னாடியே கமிட்டாகி விட்டேன். இதில் என்னுடைய கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில் வந்துபோகும் மாதிரியான கதாபாத்திரம். இருந்தும் நான் கமிட் ஆனது என்னவோ பெரிய கதாபாத்திரத்திற்காக தான். ஆனால் நான் பிக்பாஸில் இருந்ததால் படப்பிடிப்புக்குப் போகமுடிய வில்லை. அதனால் என்னுடைய கதாபாத்திரத்தை சிறு வேடமாக மாற்றிவிட்டார்கள். அரசியல் மூலமாக நம் நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அரசியலை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வியாபாரமாக தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்'' என்கிறார்.

cine231018
இதையும் படியுங்கள்
Subscribe