விடல...
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் மும்பை பாந்த்ராவில் உள்ள ஜிம்மிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது போட்டோகிராஃபர் களின் கண்களில் ஜான்வி சிக்கிவிட… கேமராக் கண்களில் படம்பிடித்துக் கொண்டனர். கறுப்புநிற டாப், மெட்டாலிக் நீலநிற யோகா ஸூட்டுமாக சிக்கென்று கச்சிதமாக இருந்த ஜான்விதான் அன்றைய ஹாட் டாபிக்!
ஆகல...
தமிழில் "காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் அறிமுகமான சார்மி, தெலுங்கு சினிமாவில் குடிகொண்ட பிறகு இங்கு தலைகாட்டவே இல்லை. இப்போது அவர் கையில் படமும் இல்லை.
அவ்வப்போது கவர்ச்சியாக ஓரிரு பாடல்களில் டான்ஸ் மட்டுமே ஆடிவிட்டு சென்றவர், தயாரிப்பாளராக இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களை மையமாகக்கொண்ட மாஸ் படங்களை எடுத்துவந்த பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், ஹீரோவாக ராம் நடிக
விடல...
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் மும்பை பாந்த்ராவில் உள்ள ஜிம்மிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது போட்டோகிராஃபர் களின் கண்களில் ஜான்வி சிக்கிவிட… கேமராக் கண்களில் படம்பிடித்துக் கொண்டனர். கறுப்புநிற டாப், மெட்டாலிக் நீலநிற யோகா ஸூட்டுமாக சிக்கென்று கச்சிதமாக இருந்த ஜான்விதான் அன்றைய ஹாட் டாபிக்!
ஆகல...
தமிழில் "காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் அறிமுகமான சார்மி, தெலுங்கு சினிமாவில் குடிகொண்ட பிறகு இங்கு தலைகாட்டவே இல்லை. இப்போது அவர் கையில் படமும் இல்லை.
அவ்வப்போது கவர்ச்சியாக ஓரிரு பாடல்களில் டான்ஸ் மட்டுமே ஆடிவிட்டு சென்றவர், தயாரிப்பாளராக இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களை மையமாகக்கொண்ட மாஸ் படங்களை எடுத்துவந்த பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், ஹீரோவாக ராம் நடிக்கும் படத்தை அவர் தயாரிக்கிறா ராம்.
ஜிம்முல
அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே உடம்பைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார்.
சிக்ஸ் பேக்ஸ் மேனியை படமெடுத்து வெளியிட்டிருக்கும் அவர், ""உங்களை சற்றும் மதிக்காதவருக்காக உருகாமல், ஒட்டுமொத்த எனெர்ஜியையும் ஒன்று சேர்த்து ஒர்க் அவுட் செய்யுங்கள். முடித்த பிறகு கண்ணாடியைப் பாருங்கள். உங்கள்மீதே காதல் கொள்வீர்கள். அந்த பெருமைக்குரிய காதலை எதற்காக மற்றவருக்காக செலவிட வேண்டும்?'' என கேட்டிருக்கிறார். பாவம் அந்தப் பொண்ணுக்கு என்ன கவலையோ?
லைக்குல...
அடிக்கடி வெள்ளித்திரைக்கு வரவில்லை என்றாலும், திஷா பானிக்கு ஏக வரவேற்பு தர ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அவ்வப் போது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் கிளுகிளுப்பான படங்கள் தான் அதற்குக் காரணம். சமீப காலமாக ஒர்க் அவுட் வீடியோக் களை மட்டுமே வெளியிட்டு வந்த திஷா, கிறிஸ்துமஸ் தினத்தன்று எல்லாருக்கும் ஹேப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துச் சொல்லி ஒரு படத்தைப் போட்டிருந்தார். வெள்ளை பிகினியில் திஷா கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் அந்தப் படத்தை 20 லட்சம் பேர் லைக்கி இருக்கின்றனர். என்ன ஒரு லைக்கு...?
நடிக்கல...
லிப்லாக் காட்சிகளில் நடிப்பது இந்தக் காலத்தில் ரொம்பவும் சகஜமாகிவிட்ட நிலையில், சாய்பல்லவி அதற்கு நோ சொல்கிறார். ஆம், "லிப்லாக் காட்சிகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் அணிந்துகொண்டு நடிக்கமாட்டேன். அவற்றிற்கு நான் எதிரானவள் அல்ல.. ஆனால், அது எனக்கு வசதியாக இல்லை' என்கிறார் அவர். அதேபோல், "சினிமாவில் போதுமான சம்பளம் கிடைப்பதால், விளம்பரங்களில் நடிக்கமாட்டேன்' என்றும் தெரிவித்திருக்கிறார்.
புடிக்கல...
ரசிகர்களைக் கைக்குள் வைத்திருக்க பல ஹீரோயின்கள் தாராளம் காட்டும்போது, வெறுமனே புருவத்தை உயர்த்தியதற்காக ஒரு கோடி ஃபாலோயர்களை அள்ளியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெரூன் நிற உடையணிந்திருக்கும் படத்தை வெளியிட்டார் ப்ரியா. கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும் அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மாறாக, பழைய ப்ரியாதான் எங்களுக்குப் பிடிச்சிருக்கு என பலர் ஹார்ஷாக திட்டியுள்ளனர்.
ஜொள்ளுல...
கால்வின் க்ளெய்ன் உள்ளாடைகளை அணிந்து நடிகைகள் போட்டோ ஷுட்டுகளில் கலந்துகொள்வது வழக்கம். திஷா படானி சமீபத்தில் அவற்றை அணிந்து வெளியிட்ட படங்கள் வைரலாகின. தற்போது "கப்பல்' படத்தில் நடித்த "சோனம் பஜ்வா', அந்த உள்ளாடைகளுடன் போட்டோஷூட் நடத்தி சூட்டைக் கிளப்பியிருக்கிறார். கவர்ச்சி நெடி தூக்கலாகவே இருக்கும் அந்தப் படத்தை எடுத்தவரே பலமுறை ஜொள்ளு விட்டிருப்பார் போலும்.
அவ்வளவு ஹாட்!
இல்ல...
இந்திய திரைத்துறையில் புதுமையைத் தரக்கூடிய 12 நடிகைகளின் பட்டியலில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸி ஆகிய மூன்று தென்னிந்திய நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள்தான் இந்தியா முழுமைக்கும் உள்ள பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரிக்கின்ற னர். இதில் கவனிக்கவேண்டிய விஷயமே முன்னணி பாலிவுட் நடிகைகளே இந்த லிஸ்டில் இல்லை என்பதுதான்.
கிடைக்கல...
பஞ்சாப் ப்யூட்டியான மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு இது மோசமான வருடமாம். ஆம், அவர் நாயகியாக நடித்த மூன்று படங்களுமே படுதோல்வி அடைந்து… பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இதனால், டோலிவுட் வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, மெஹ்ரீன் ஐதராபாத்திலேயே தனி வீடு எடுத்து தங்கி ப்ராஜெக்டுகளில் கவனம் செலுத்துகிறாராம். வீடு மாற்றியவுடன் கிடைத்திருக்கும் "எஃப் டூ' படவாய்ப்பு மெஹ்ரீனுக்கு கைகொடுக்குமா? பாக்கலாம்.