Advertisment

நம்மில் ஒருவர் விஜய்சேதுபதி -"96' பட டச்சிங்!

/idhalgal/cinikkuttu/one-us-vijay-sethupathi

மெட்ராஸ் என்டர்பிரைஸஸ் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலிலித் குமார் வெளியிட்ட "96' படத்தின் நூறா வது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலிலில் நடைபெற்றது.

Advertisment

vijaysethupathi

இதில் "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி. பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி.எஸ். மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போராளியும், மே 17 இயக்கத்

மெட்ராஸ் என்டர்பிரைஸஸ் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலிலித் குமார் வெளியிட்ட "96' படத்தின் நூறா வது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலிலில் நடைபெற்றது.

Advertisment

vijaysethupathi

இதில் "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி. பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி.எஸ். மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போராளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்டனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில், ""இந்த வெற்றிவிழாவிற்கு இயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்பதை தற்போதுவரை புரிந்து கொள்ளமுடியவில்லை.

Advertisment

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக் கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் "96.' படம் அற்புதமாக இருந்தது.

அண்மைக்காலத்தில் எனக்குப் பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இன்றைய சமகால இளைஞர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை யெல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்ப வராக விஜய்சேதுபதி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

vijaysethupathiஇன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய்சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களைப் போன்றவர்கள்தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

இந்தப் படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல்தான். நாங்கள் மனிதர்களை காதலிலிக்கிறோம்.

இயற்கையை நேசிக்கிறோம். அதனால் போராடுகி றோம். இதுதான் உண்மை'' என்றார்.

விஜய்சேதுபதி பேசுகையில், ""இந்த விழாவிற்கு திருமுருகன்காந்தி வருகை தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ். நான் எதிர்பார்க்கவில்லை. அவரை, காதலைப்பற்றிப் பேசவேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எல்லா நல்ல விஷயங்களும் அனை வரையும் சென்றடைய வேண்டும். அது போய்ச் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய்சேதுபதியும் திரிஷா வும் மேடையேறி ஒருவரை யொருவர் ஆரத்தழுவி ஆச்சர்யப்படுத்தினார்கள்.

cine190219
இதையும் படியுங்கள்
Subscribe