இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசை இயக்கத்தில் உருவாகியுள்ள "கண்டுபிடி' என்கிற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
இதில் நாயகன், நாயகியாக கார்த்திக் முனிஸ், சுமா பூஜாரி நடித்துள்ளனர். கார்த்திக் முனிஸ் சிவகாசியைச் சேர்ந்தவர். இவர் அடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தத் திரைப்படத்தையும் இசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/one-two.jpg)
இயக்குநர் எம்சி ரிக்கோ நம்மிடம் பேசும்போது, ""கார்த்திக் முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும், திறமையும் உள்ளவர். அவரின் முன்று வருட சினிமா முயற்சி யில் முதன்முதலாக அவர் என்னுடைய இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படப் பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இப்பொழுது படம் ஆரம்ப கட்ட வேலையில் உள்ளது.
என் பாடலில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராகுல், படத்தொகுப்பாளர் எம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/one-two-t.jpg)