நல்ல முடிவு!
இந்தியாவில் மருந்து விற்பனையில் நடக்கும் தில்லுமுல்லு பற்றி பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதி, அதிரவைத்தவர் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணரான இவர், உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான "அக்ஷய பாத்ரா' என்ற அமைப்பின் தூதுவராகவும் இருக்கிறார். கொள்கைப் பிடிப்புள்ள தன் தந்தையைப்போலவே அரசியல் ஆர்வம் கொண்டவரான திவ்யா, அதை தந்தையிடம் சொல்ல ஓகே சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் சுகாதாரத்துறையில் மிகப்பெரிய நல்ல மாற்றம் நிகழ்த்த வேண்டும் என்பது திவ்யாவின் கனவு. சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, திவ்யா எடுத்துக்கொண்ட படம் வைரலானது. கூடியவிரைவில் அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கிறங்கடித்த போஸ்கள்!
"தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் நடித்த ப்ரியாவை நினைவிருக்கிறதா? சாரா ஜெயின் டியாஸ் என்ற கவர்ச்சிப் பதுமையை மறைத்துக்கொண்டு, தமிழுக்கே உரிய ஹோம்லி கெட்டப்பில் நடித்து ஸ்கோர் செய்தவர்தான் அந்தப் ப்ரியா. அதன்பிறகு, வெள்ளித்திரையில் பெரிய பிரபலமாகவில்லை என்றாலும், சாரா இன்னமும் ஒரு சூப்பர் மாடலாகவே இருக்கிறார். பிகினி போட்டோஷூட்டுகளில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது எடுக்கும் பிகினி படங்களை ஃபில்டர், எடிட்டிங் இல்லாமல் அப்படியே அப்லோட் செய்து, அப்லாஸுகளையும் அள்ளுகிறார். சமீபத்தில் கிங்பிஸர் காலண்டர் ஷூட்டுக்காக அவர் கொடுத்த மூன்று போஸ்களும், கேமராமேனையே கிறங்கடித்ததாம்.
பிகினி திகில்!
ஃபேமிலி கேர்ள் கெட்டப்பில் இருந்து, ஹாட்- மோடுக்கு எப்போது மாறினாரோ, அப்போதிருந்தே பூஜா ஹெக்டே கால்ஷீட் கொடுக்கமுடியாத அளவுக்கு பிஸியாம். "துவ்வாடா ஜகந்நாதம்' அதற்குத் தொடக்கப்புள்ளி வைத்தது. தற்போது அக்ஷய்குமாருடன் "ஹவுஸ்ஃபுல்-4' படத்தில் நடித்துவரும் பூஜாவை, படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதனால், அவர் தயாரிக்கும் அடுத்த நான்கு படங்களுக்கும் பூஜாவையே புக் செய்துவிட்டாராம். அல்லு அர்ஜூன், பிரபாஸ் என அடுத்தடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போடத் தயாராகிவரும் பூஜா, அடிக்கும் வெயிலில் சூட்டைத் தணித்துக்கொள்ள மஞ்சள் நிற நீச்சலுடையுடன் குளியல் போட்டதோடு வெளியிட்ட பிகினி போட்டோதான் டோலிவுட் ரசிகர்களிடையே வைரல் டாக்!
உள்ளே ஒண்ணுமே இல்ல...!
இந்திய சினிமாவில் வேறெந்த நடிகையும் செய்யத் தயங்கும் வேலைகளை, ஆர்வமாக, துணிச்சலாக செய்துகாட்டுவதில் ஷெர்லின் சோப்ராவுக்கு நிகர் அவரே. இந்தியாவிலிருந்து முதன்முறையாக "ப்ளே பாய்' நிறுவனத்தின் போட்டோ ஷூட்டுக்கு, பொட்டுத் துணியில்லாமல் போஸ் கொடுத்தார். அதன்பிறகு, "காமசூத்ரா 3டி' படத்தில் ஒப்பந்தமாகி, ட்ரெய்லர்வரை வெளியாகி பின் கப்சிப் என்று ஆனது. தொடர்ந்து கிளுகிளுப்பான படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ஷெர்லின், தற்போது புதிதாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். பெட்-காபி குடிப்பதுபோல் இருக்கும் படத்தில் போர்வைக்குள் இருக்கும் ஷெர்லின், உள்ளே ஒன்றுமே போடவில்லை. இந்தக் கோலத்தில் இருக்கும் அவருக்கு காபி கொண்டு போனவரின் நிலையை நினைத்தால்தான் அவ்வ்வ்வ்வ்.
முத்தப்பயிற்சி!
தெலுங்கு சினிமாவில் ரிலீஸுக்கு முன்பே அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் படம் "மன்மதுடு-2.' நாகார்ஜூனா, ரகுல்ப்ரீத் சிங் இருவருக்குமான உதட்டு முத்தக்காட்சி அதை இன்னும் கூட்டியிருக்கிறது. படத்தின் சில காட்சிகள் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டுவரும் நிலையில், தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் படப் பிடிப்பின்போது எடுக் கப்பட்ட ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார் ரகுல். முகம் நிறைய சிரிப்போடு இருக்கும் அந்தப் புகைப்படம், பார்ப்பவர்களை நிச்சயம் ரசிக்கவைக்கும். அதற்குக்கீழே, முகத்துக்குக் கொடுக்கும் மிக அத்தியாவசியமான பயிற்சி புன்னகைதான். "பிரச்சினைகளை உதறித் தள்ள முடிந்தமட்டும் புன்னகைத்துக்கொண்டே இருங்கள்' என கேப்சனும் போட்டிருக்கிறார்.