பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பாக மேகலா, ஆர். தர்மராஜ், ஷோபா. கே.கே. சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் "ஒண்டிக்கட்ட.'

Advertisment

ondi

விக்ரம் ஜெகதீஷ் நாயகனாகவும், நேகா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இவர் "உச்சத்துல சிவா', "தண்ணில கண்டம்' போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

எழுதி இயக்கி இருப்பவர் இசை யமைப்பாளர் பரணி.

""சினிமாவில் நிலவிவந்த பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இப்போதுதான் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது... இந்நிலையில் நான் இசையமைத்து இயக்கி இருக்கும் "ஒண்டிக்கட்ட' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது'' என்றார் பரணி.