ளமை துள்ளும் காதல் படைப்பாக வெளிவரவுள்ளது "ஓ மை கடவுளே.' இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பிப்ரவரி 14 காதலர் தினத் தன்று இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் என்ன சொல்ல வர்றாங்கன்னா.

OMG

ஹீரோ அசோக் செல்வன்...

"""ஓ மை கடவுளே' என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடமாக இயக்குநர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு பண்ணி பண்ணதுதான் இந்தப்படம். படத்தில் நாயகி ரோல் முக்கியமானது.

ரித்திகா சிங் பண்ணினா நல்லாருக் கும்னு இரண்டுபேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா கதை கேட்டதும் அவங்களுக்குப் பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும்போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங் களுக்கு இது தமிழ்ல முதல் படம். நல்லா பண்ணியிருக்காங்க.

அப்புறம் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம்.

அவருக்கு பெரிய மனசு.

எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார்.''

ரித்திகா சிங்

""இந்தக் கதை கேட்டதும் பிடிச்சது. இந்தக் கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அசோக் செல்வன் நடிக்கும்போது ரொம்ப உதவியா இருந்தார். விஜய் சேதுபதிகூட எனக்கு காட்சிகள் இல்ல.

ஆனால் படப்பிடிப்பில் ஒரு நாள் அவரை சந்தித்தேன். அவருடன் "ஆண்டவன் கட்டளை' நடித்திருக்கிறேன். நிறைய பேசினோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் செய்யும் பாத்திரங்கள் எனக்குப் பிடிக்கவேண்டும். படம் ஓடுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்கவேண்டும். இப்படத்தில் மிக சந்தோஷமாக இருந்தேன்.''