ஔடதம்' படத்தை தனது ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ளதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் நேதாஜி பிரபு. சமைரா நாயகியாக நடித்துள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் ரமணி. ஒளிப்பதிவு ஸ்ரீரஞ்சன் ராவ், இசை இசையரசர் வி. தஷி, சண்டைப் பயிற்சி தேவா, டிசைன்ஸ் உதயா.
படம் பற்றி நேதாஜி பிரபு கூறுகையில், ""நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சினிமா ஆசை விடவில்லை; வந்து விட்டேன். ஆனால் வழக்கமான படமாக நாமும் ஒரு படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்க நினைத்தேன். இயற்கைவழிகளில் உண்டு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே நம் முன்னோர்கள் "ஔஷதம் குறை, ஔஷதம் தவிர்' என்றார்கள்.
அதன் பின்னணி மருந்துகளை அதிகம் உண்ணக்கூடாது என்பதுதான். "ஔடதம்' என்கிற பெயரில் மருத்துவம் பற்றி எடுக்க ஒரு கதை தேடினேன். அப்போது மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும்படியான ஒரு மோசடி பற்றிய செய்தி 2013, மே 14-ல் வந்திருந்தது.
தவறான மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்த அந்தச் செய்தி காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டது. ஆனால் அந்த மருந்து வியாபாரம் இன்னும் கேட்பாரில்லாமல் தொடரவே செய்கிறது.
""இப்போது எவ்வளவோ படங்கள் வருகின்றன. ஆனால் அது நல்ல படம் என்று தெரிவதற்குள் சரியான திரையீடு அமையாமல் அதன் ஆயுள் முடிந்துவிடுகிறது. நான் ஒரு திட்டத்தில் உள்ளேன். திரையரங்கு திரையரங்காகச் சென்று "ஔடதம்' என எழுதப்பட்ட பேனாக்களை ரசிகர்களைச் சந்தித்து வழங்கப்போகிறேன். இப்படி ஒவ்வொரு திரையரங்காகச்சென்று 5,000 பேனாக்கள் வீதம் மூன்று லட்சம் பேனாக்களைத் தரப்போகிறேன். இப்படம் சமூகத்தில் நல்ல விழிப்பை ஏற்படுத்தும் என்றார், நேதாஜி பிரபு.