"அது வேற, இது வேற' என்ற படத்தைத் தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ். ஜெய சீலன் அடுத்ததாகத் தயாரிக்கும் படம் "ஒபாமா உங்களுக்காக.' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று
"அது வேற, இது வேற' என்ற படத்தைத் தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ். ஜெய சீலன் அடுத்ததாகத் தயாரிக்கும் படம் "ஒபாமா உங்களுக்காக.' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசியலை அடித்து துவைத்துக் காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். ஜனகராஜ் இதுவரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.
புதுமுகநாயகி பூர்ணிஷா அறிமுகமாகிறார்.
இயக்குநர்களாகவே விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், ரமேஷ்கண்ணா மற்றும் டி. சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் டி.வி. புகழ் கோதண்டம், சரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
"பாஸ்மார்க்' படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தது பெயரை நாநிபாலா என்று மாற்றிக்கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.
""இப்பட கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கிய இடம்பெறுகிறது.
அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்கவிடும் படமாக இது இருக்கும்'' என்றார் டைரக்டர் நாநிபாலா.