ஸ்.டி. ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் "நுங்கம்பாக்கம்.'

Nungambakkam

நுங்கம்பாக்கம்' இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதா பாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா, மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஆ. வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

கதை வசனத்தை ஆர்.பி. ரவி எழுதி இருக்கிறார்... இவர் ஏற்கெனவே விமல் நடித்த "சில்லுன்னு ஒரு சந்திப்பு' மற்றும் "தற்காப்பு' போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி. ரமேஷ் செல்வன். தயாரிப்பு: எஸ்.கே. சுப்பையா.

"" "நுங்கம்பாக்கம்' முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும். நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்கவில்லை. நிறைய இழந்திருக்கிறேன் நிம்மதியையும் சேர்த்து. ஜெயிக்கணும்கிற வெறி இருக்கு. உழைக்கவும் செய்கிறேன். வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நிறைய பிரச்சினைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன். சென்சார் செய்யப்பட்டு யு/ஏ கொடுக் கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த தித்தீர் பிலிலிம்ஸ் கே. ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்'' என்றார் இயக்குனர் எஸ்.டி. ரமேஷ்செல்வன்.

Advertisment