Advertisment
/idhalgal/cinikkuttu/now-ushru

வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங் களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிஸி நடிகரான "மைம்' கோபி நம்மகிட்ட பேசும்போது-

Advertisment

""பிரசன்னா நடிப்பில், மாரிமுத்து இயக்கத்தில் உருவான "கண்ணும் கண்ணும்' படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதைத்

வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங் களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிஸி நடிகரான "மைம்' கோபி நம்மகிட்ட பேசும்போது-

Advertisment

""பிரசன்னா நடிப்பில், மாரிமுத்து இயக்கத்தில் உருவான "கண்ணும் கண்ணும்' படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து "மெட்ராஸ்', "மாரி', "கபாலி', "மாயா', "கெத்து', "பைரவா', "உறியடி', "கதகளி', விஜயகாந்த் மகன் நடித்த "மதுரைவீரன்' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.

Advertisment

gopi

வளர்ந்துவரும் நடிகனான எனக்கு மிகப்பெரிய இழப்பாக நினைப்பது "செயல்' படத்தில் நடிக்க முடியாமல் போனதுதான்.

"செயல்' படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசினார்கள்.. அருமையான வேடம் அது. ஆனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் நடிக்க முடியாமல்போனது. அதற்காக அவர் களிடம் வருத்தம் தெரிவித்தேன்.

படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அந்தப் படத்தை பார்த்தேன்.

நான் நடிக்க முடியாமல்போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். இருந்தாலும் நான் தவறவிட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது.

எல்லா படத்திலும் ஹீரோவுக்கு தான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது. அதனால் இனி எந்த வாய்ப்பும் என் கைநழுவிப்போகாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe