சென்னை ஸ்டுடியோக்களில் அமுதனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் பிரசாத் ஸ்டுடியோவில் போடப்படும் சினிமா செட்டுகளின் காவலாளி இவர். மாற்றுத் திறனாளியான அமுதனுக்கு மூன்று சக்கர சைக்கிளே துணை. அந்த மூன்று சக்கர சைக்கிளை வாங்கிக் கொடுத்தவர் "தல' அஜீத்.

Advertisment

vijaysethupathi

இந்த அமுதன்தான், விஜய்சேதுபதி சினிமாவுக்கு வந்த புதிதில், இந்தந்த கம்பெனிக்கு போனா சான்ஸ் கிடைக்கும் எனச் சொல்லும் வழிகாட்டியாம். விஜய் சேதுபதியின் ஊரான ராஜபாளையத்தைச் சேர்ந்தவர், இன்னும் சொல்லப்போனால் சேதுபதிக்கு மாமா உறவு முறை கொண்டவர். விஜய் சேதுபதி தன்னைக் கவனிப்பாரா என்ற ஏக்கத்தில் இருக்கிறார் அமுதன்.