வெங்கட் பிரபு டைரக்ஷனில் "பார்ட்டி', ஷக்தி சிதம்பரம் டைரக்ஷனில் "சார்லிசாப்ளின்-2' என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா. சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ்...

prabhudeva

இவர்கள் தவிர ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே பார்ட்டியில் இருக்கிறது. இதேபோல் "சார்லிசாப்ளினி'லும் பிரபுதேவா- பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஏராளமானோர் ஜொலிக்கின்றனர். மேற்கண்ட இரண்டு படங்களையும் சன் டி.வி. வாங்கியிருப்பதால் செம ஹேப்பியாக இருக்கிறார் டி. சிவா.

Advertisment

"வால்டர்' ஸ்டார்ட்!

vikramprabhu

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க, சத்யசிவா இயக்கத்தில் "கழுகு- 2' படத்தை மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள "வால்டர்' என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

Advertisment

இந்தப் படத்தில் அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள்.

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக "வால்டர்' படம் உருவாகிறது.