Advertisment

வாரிசுகளின் ஆட்டம்! - 2 இது என்னோட படம் இல்ல -சொல்கிறார் தங்கர்!

/idhalgal/cinikkuttu/not-picture-me-thangarpachan

நீண்ட இடைவேளைக் குப்பிறகு, தன் மகன் விஜீத் பச்சானை ஹீரோ வாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்கு நர் தங்கர்பச்சான். அது பத்தி என்ன சொல்றாருன்னா...

Advertisment

""இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானா அமைஞ்சது. என்னைப் பொருத்தவரைக்கும் இத நான் என்னோட முதல் படம் மாதிரி தான் செஞ்சிருக்கேன். இதுவரை

நீண்ட இடைவேளைக் குப்பிறகு, தன் மகன் விஜீத் பச்சானை ஹீரோ வாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்கு நர் தங்கர்பச்சான். அது பத்தி என்ன சொல்றாருன்னா...

Advertisment

""இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானா அமைஞ்சது. என்னைப் பொருத்தவரைக்கும் இத நான் என்னோட முதல் படம் மாதிரி தான் செஞ்சிருக்கேன். இதுவரை எடுத்த என் படங்கள்ல என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட படம் மாதிரி இருக்காது. சொல்லக் கூச்சமா தான் இருக்கு. 13 நாள் வெறும் சண்டைக் காட்சிய மட்டும் எடுத்துருக்கேன். போலீஸே என் படங்கள்ல வந்ததில்ல. ஆனா இந்தப் படத்துல போலீஸ், கொலை, போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கு. ஆனா அதில ஒரு தனித்துவம் இருக்கு!

Advertisment

tt

இந்தப் படத்தோட கதை முழுக்க முழுக்க சென்னைல நடக்கக்கூடிய கதை. இதுல விஜீத் கீழ்நிலையில இருக்குற ஒரு குப்பத்து ஏழைப் பையன். எந்த எதிர்காலத் திட்டமும் இல்லாத, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பையன். அவனுக்கும், ஏகப்பட்ட கோடி சொத்து இருக்கிற பணக்காரன், ஒருத்தனுக்கும் இடையில நடப்பதுதான் கதை. இதுல பணக்காரனா முனீஸ்காந்த் நடிச்சிருக்கார். நிறைய பணத்த வச்சிக்கிட்டு வாழப் பிடிக்காத முனீஸ் காந்த்; பணத்தைத் தேடிக் கிட்டிருக்க விஜித்! இவங்க இரண்டுபேருக்கும் இந்த பணம் எதைக் கற்றுத்தருது- அதான் இந்தப் படத்தோட கதை'' என்றவரிடம் இந்த தலைப்புக்கு என்னங்க அர்த்தம்? என்றோம்.

""கண்ணதாசன் தயாரிச்ச "ரம்பையின் காதல்' படத்துல ஒரு பாடலின் தலைப்பு ""டக்கு முக்கு டிக்கு தாளம்''-னு இருக்கு. அப்பறம் எங்க ஊருல "டக்கு முக்கு டிக்கு'-காரன்னு ஒரு ஆளே இருக்காரு. "டக்கு முக்கு டிக்கு'-ன்னா ஆள் மாறிக்கிட்டே இருப்பான். எடத்துக்குத் தகுந்த மாதிரி ஆள் மாறிக்கிட்டே இருப் பான். "டக்கு முக்கு டிக்கு'-னு ராகம் மாறுது இல்லையா, ஒருமுறை டக்குனு போடுற ராகம் அடுத்தமுறை முக்கு, அடுத்து டிக்குனு மாறுது இல்லையா. அதுதான் "டக்கு முக்கு டிக்கு தாளம்' என்றார் தங்கர்.

cini051119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe