Advertisment

யாருக்கும் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை! -சீறும் இலியானா!

/idhalgal/cinikkuttu/no-one-needs-respond-well-done-ileana

லியானா, தன் நடிப்பைப்போலவே அதிரடி ஸ்டேட்மென்ட்களுக்கும், தன் ஆண் நண்பருடனான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைப்பதற்கும் பேர்பெற்றவர். சமீபகாலமாக படங்களில் அதிகமாகத் தலைகாட்டாதது, ஆண் நண்பருடனான உறவு முறிவைப் பற்றி மனம் திறக்கிறார்.

Advertisment

"ரெய்டு' படத்துக்குப்பிறகு அதிகமாக உங்கள் தலை திரைப்படத்திலோ, வெளி யிலோ தட்டுப்படவில்லையே. ஏன்?

ii

"ரெய்டு' படத்துக்குப்பின் நான் சிகிச்சையில் இருந்தேன். இரண்டு நாளுக்கொரு முறை 12 மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருந்தது. இந்த மாத்திரைகள் உடல் எடையை அதிகரிப்பவை. அதனால் அந்த எடையைக் குறைக்க ஜிம்முக்குச் சென்

லியானா, தன் நடிப்பைப்போலவே அதிரடி ஸ்டேட்மென்ட்களுக்கும், தன் ஆண் நண்பருடனான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைப்பதற்கும் பேர்பெற்றவர். சமீபகாலமாக படங்களில் அதிகமாகத் தலைகாட்டாதது, ஆண் நண்பருடனான உறவு முறிவைப் பற்றி மனம் திறக்கிறார்.

Advertisment

"ரெய்டு' படத்துக்குப்பிறகு அதிகமாக உங்கள் தலை திரைப்படத்திலோ, வெளி யிலோ தட்டுப்படவில்லையே. ஏன்?

ii

"ரெய்டு' படத்துக்குப்பின் நான் சிகிச்சையில் இருந்தேன். இரண்டு நாளுக்கொரு முறை 12 மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருந்தது. இந்த மாத்திரைகள் உடல் எடையை அதிகரிப்பவை. அதனால் அந்த எடையைக் குறைக்க ஜிம்முக்குச் சென்று கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதுதான் காரணம். இப்போது எடை கட்டுக்குள் வந்துவிட்டது. பாம்பே டைம் பேஷன் டைம்ஸுக்கு ராம்ப் வாக் செய்தேன். எப்போதுமே ராம்ப் வாக்குக்குமுன்பு சற்று நெர்வஸாக இருப்பேன். ஆனால் நிகழ்ச்சியின்போது சிறப்பாகச் செய்தேன்.

Advertisment

சினிமா உலகம் மாஸ் திரைப் படங்களில் இருந்து கதை யாழம் மிக்க திரைப்படங்களையும் நோக்கி சற்றே அடியெடுத்து வைத்திருக்கிறது. இருவகைப் படங்களையும் செய்திருக்கும் நீங்கள் இந்தப் போக்கைக் குறித்து எவ்விதமாக உணர்கிறீர்கள்?

சினிமா ரசிகர்கள் தற்சமயம் வெரைட்டியான கதைகளை ரசிக்கிறார்கள். "பட்லா' மாதிரியான மாஸ் திரைப்படங்களையும் வரவேற்கிறார்கள். கதையாழம்மிக்க படங்களும் நன்றாகப் போகின்றன. நான் எதையும் தவறவிட்டதாக உணரவில்லை. சிலசமயம், சில விஷயங்கள் வழக்கமல்லாத காரணங்களால் சில விஷயங்களைச் செய்யமுடியாமல் போயிருக்கலாம். அதில் எனக்கு வருத்தமில்லை.

உங்களுடைய 15 வருட சினிமா கேரியரில் சினிமா உலகத்தின் விதிகளைப் பின்பற்றியவர் இல்லை. இது உங்களுக்கு ஏதும் சிரமத்தை உண்டு பண்ணியதா?

uu

நான் எனக்கான சொந்த விதிகளை உருவாக்கிப் பின்பற்றுபவள். என்னு டைய கேரியரின் தொடக் கத்தில் ஒரு நடன இயக்குநர் ஒருவரிடம் "ஏன் என்னை கஷ்டம் தருபவளாக, பிடிவாதக்காரியாக நினைக்கிறார்கள்?' என கேட்டேன். "நீ நீயாக இரு! கொஞ்சநாளில் அது எல்லாருக்கும் பழகிப் போகும்' என்றார்.

இன்ஸ்டா கிராமில் ஆண்ட்ரு நீபோனும் நீங்களும் பரஸ்பரம் பாலோ பண்ணுவதை நிறுத்தி விட்டீர்கள்; என்ன நடந்தது?

நான் என் தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதுமே விளம்பர வெளிச்சத்தில் வைத்துக்கொண்டதில்லை. இதுவரை எனக்கான அனுபவங்களை நான் விரும்பியே வந்திருக்கிறேன் அவ்வளவுதான் இப்போது சொல்லமுடியும்.

இதுபற்றி நீங்கள் பேசாமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால் அதனாலேயே நிறைய வதந்திகள் எழுகிறதைப் பார்க்கிறீர்கள் அல்லவா?

நாம் என்ன செய்தாலும், மக்கள் அதனைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருப் பார்கள். நான் என் குடும் பத்தைத் தாண்டி யாருக்கும் எதைப்பற்றியும் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் இருவரின் தொழிலும் வெவ்வேறாக இருந்ததுதான் பிளவுக்குக் காரணமாக இருந்ததா?

நிச்சயமாக இல்லை. ஒரு நடிகருடன் என் நட்பு இருக்கும் பட்சத்தில் இருவரும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒரே விஷயத்தைத்தான் பேச வேண்டியிருக்கும்! ஒரு ஜோடி வெவ்வேறு தொழிலில் இருக்கும்போதுதான் பேச விஷயமிருக்கும்.

ஒரு உறவு முறிந்த இடத்தில் இன்னொரு உறவு மலர்வதற்கு இடமிருக்கிறதுதானே?

இப்போதைக்கு நான் எந்த ஒரு உறவையும் எதிர்பார்த்துக்கொண்டு இல்லை.

ஆண்ட்ரூவுடன் இப்போதும் நட்பு இருக்கிறதா?

உண்மையிலே என்னால் இந்தக் கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது.

cini171219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe