Advertisment

நோ கிஸ்ஸிங் சீன் -கீர்த்தி சுரேஷ்

/idhalgal/cinikkuttu/no-kissing-scene-keerthi-suresh

"நடிகையர் திலகம்' வெற்றிக்குபிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய், விக்ரம், விஷால் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற நிலையில் தன் சினிமா வாய்ப்புகள் குறித்து கீர்

"நடிகையர் திலகம்' வெற்றிக்குபிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய், விக்ரம், விஷால் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்ற நிலையில் தன் சினிமா வாய்ப்புகள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில்.... ""திரையுலகில் என்னை விட அழகும், திறமை யும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். அதிர்ஷ்டம்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Advertisment

keerthisuresh

அதேநேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கைக் கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. கதைகளைத் தேர்வுசெய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்தக் காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை.

அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன. எனக்கு சௌகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்கமாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்தக் காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கமுடியாது'' என்கிறார் கீர்த்தி.

cine140818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe