கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ் மற்றும் நாஸிக் ராவ் மீடியா நிறுவனங் கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித் துள்ள படம் Trapcity. பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ஜி.வி. பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் டெல். கணேசன் நம்மிடம், ""இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக் வேலைக்காகத்தான் ஜி.வி.யைச் சந்தித்தேன்.. அப்போதுதான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜி.வி. நடித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hollwoodproducer.jpg)
படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். வறுமை காரண மாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட, போலீசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மென்ட் செய்பவராக ஜி.வி. பிரகாஷ் வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும்போதே பிராண்டன் வெளியிட்ட ஒரு பாடல் பெரிதாக ஹிட் ஆகிறது. படத்தின் கதை இப்படியாகத்தான் ட்ராவல் ஆகும் படம் புரொடக்ஷன் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் வேலை நடந்துகொண்டிருக்கிறது.''
அங்கு ரிலிஸ் எப்படி?
அங்கு முதலில் டிஸ்ட்ரிபியூட்டரிடம் பேசுவோம். அதன்பிறகு நிறைய மார்க்கெட் இருக்கிறது..
டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன், ட்ராப் சிட்டி படங்களின் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களை டிஸ்ட்ரிபியூட் பண்ண இருக்கிறேன். தமிழில் இப்போதைக்கு படம் பண்ணும் ஐடியா இல்லை'' என்றார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/hollwoodproducer-t.jpg)