குழந்தைகளுக்கெதி ரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "சாக்லெட்' என்ற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது. இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் இதைத் தயாரித்திருப்பவர் பத்திரிகையாளர் கவிதா.எஸ்.

Advertisment

இந்தப் பட முயற்சி பற்றி தயாரிப்பாளர் கவிதா நம்மிடம் பேசும்போது, ""இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் "கொலை விளையும் நிலம்' என்று ஆவணப்படம் ஒன்றை எடுத்தோம். விவசாயிகள் தற்கொலை பற்றி பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி முன்னெடுப்பில் அந்தப் படம் எடுக்கப்பட்டது.

Advertisment

அந்த முதல் பட அனுபவம் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் எங்களுக்கு அமைந்தது.

ddd

சமீபத்தில் அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடுமை என்னை மிகவும் பாதித்தது. அது சம்பந்தமான விழிப்புணர்வை வெளிப்படுத்த வேண்டுமென்று தீவிரமாக யோசித்தோம். நண்பர்களுடன் விவாதித்து வந்தோம். இதுசம்பந்தமாகக் குறும்படம் எடுத்துள்ள மதுரையைச் சேர்ந்த நான்சியை அழைத்துப் பேசினோம். அவரையே படத்தை இயக்க வைத்தோம். அதுதான் "சாக்லெட்.'

"தினமலர்' நிறுவனம் அளித்த சிறு உதவியுடன் தொடங்கப்பட்டது இப்படம். இந்தப் படத்தில் பிரபலங்கள் இடம்பெற்றால் பலரையும் சென்றடையும் என்று கேட்டபோது நட்டி, காயத்ரி, தேஜஸ்வினி, விஜய் டிவி பப்பு, அல்கா போன்ற பலரும் எங்களை எதற்கும் கட்டாயப்படுத்தாமல் நடித்துக்கொடுத்தனர்.

ரொம்பவும் உதவி யாக இருந்து முடித்துக் கொடுத்தனர்.

பத்திரிகையாளர்கள் "தினகரன்' மீரான், "இந்து' மோகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இது வியாபார நோக்கத்தில் உருவாக்கப் பட்டது அல்ல. முழுக்க முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

இக்குறும்படத்தில் நடித்தது பற்றி நட்டி (எ) நட்ராஜிடம் நாம் கேட்ட போது, ""இந்த நல்ல முயற்சிக்கு நானும் உதவியிருக்கேன், அவ்வளவு தான். மற்றபடி எல்லாப் பெருமையும் கவிதா மேடத்திற்கும் பத்திரிகை சகோதரர்களுக்கும்தான் சேரும்'' என தன்னடக்கத் துடன் சொன்னார்.

Advertisment