Advertisment
/idhalgal/cinikkuttu/news

விஷ்ணுவிஷாலின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் "கவரிமான் பரம்பரை'-யில் வெயிட்டான ரோலில் நடிக்கிறார் பிரபு. மதுரை, சிவகங்கை மாவட்ட கிராமங்களில் படப்பிடிப்பு நடப்பதால், தினமும் பிரபுவைப் பார்க்க ஏராளமானோர் ஷூட்டிங் saranyaஸ்பாட் டுக்கு வருகிறார்கள். அப்படி வரும் அனைவரிடமும் சிரித்து

விஷ்ணுவிஷாலின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் "கவரிமான் பரம்பரை'-யில் வெயிட்டான ரோலில் நடிக்கிறார் பிரபு. மதுரை, சிவகங்கை மாவட்ட கிராமங்களில் படப்பிடிப்பு நடப்பதால், தினமும் பிரபுவைப் பார்க்க ஏராளமானோர் ஷூட்டிங் saranyaஸ்பாட் டுக்கு வருகிறார்கள். அப்படி வரும் அனைவரிடமும் சிரித்துப் பேசி, மரியாதை கொடுத்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தனது சொந்த செலவில் வேட்டி- சட்டை எடுத்துக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினாராம் பிரபு.

Advertisment

குணச்சித்திர நடிப்பில் வெளுத்துக்கட்டும் சரண்யா பொன்வண்ணனின் மூத்த மகள் ஆக்ஷன் ஹீரோயினாக என்ட்ரியாகப் போகிறார். நீச்சல் வீராங்கனையான அவர், இப்போது தனது தந்தை துணையுடன் சாலிகிராமத்தில் இருக்கும் ஒரு ஜிம்மிற்கு தினமும் மாலை ஐந்து மணிக்கு வந்து இரண்டு மணி நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறாராம்.

Advertisment

சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் டைரக்ஷனில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் "கனா.' இப்படத்திற்காக சிவாவின் மகள் ஆராதனா பாடிய "வாயாடி பெத்த புள்ள' பாடல் செம ஹிட்டடித்துள்ளது.

siva-daughter

இதுவும் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட நியூஸ். ராஜேஷ் எம். டைரக்ஷனில் நயன்தாராவுடன் சிவா ஜோடிபோடும் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நடந்தது. குல்பி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிவாவை காரில் போகும் நயன்தாரா பார்ப்பதுபோல் சீன். சிவகார்த்திகேயன் 14 குல்ஃபி ஐஸ் சாப்பிட்டதும்தான் சீன் ஓ.கே. ஆனதாம்.

cine110918
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe