ரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன். சி தயாரித்து, இயக்கி, கடந்த 10-ஆம் தேதி ரிலீசாகியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ.'
பட அனுபவம் குறித்து நாயகி ஷில்பா மஞ்சுநாத் நம்மிடம் பேசினார்.
""தமிழில் முதன்முதலில் ஒப்பந்தமான படம் "பேரழகி ஐ.எஸ்.ஓ.'தான். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்தான். இந்தப்படத்தின் கதையை இயக்குநர் விஜயன் சொன்னபோதே இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று தோன்றியது.
இரண்டு வேடங்களில் நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்த சமயத்தில் தமிழில் என்னுடைய படங்கள்கூட வெளியாகவில்லை.. ஆடிஷனில் கலந்துகொண்ட பின்தான், எனக்கும் இந்தப்படத்தில் நம்பிக்கை வந்தது.
நான்கைந்து முறைக் கும்மேல் ஆடிஷன்களில் கலந்துகொள்ள வேண்டியிருந் தது. காரணம் எனது கதாபாத்திரம் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.
ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமாக்கப் பட்டதால், இரண்டு கேரக்டர்களுக்கான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகிவிட்டது.
தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறேன்.. தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும், எல்லாமே லவர் கேர்ள் கதாபாத்திரங்களாகவே வருவதால் அவற்றை தவிர்த்துவிடுகிறேன்.. நடிப்பில் புகுந்து விளையாடும் சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்'' என்கிறார்.