Advertisment

சூரியின் புதிய தங்கச்சி!

/idhalgal/cinikkuttu/new-sunshine-sun

"சாமி-2'-வின் இசை வெளியீட்டு விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர்கள் டெல்லிலி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டைப் பயிற்சி இ

"சாமி-2'-வின் இசை வெளியீட்டு விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர்கள் டெல்லிலி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டைப் பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

keerthisuresh

நடிகர் சூரி பேசுகையில், ""தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின்போது வைட் ஷாட், குளோஸ் ஷாட் என்பதைப்போல் ஹரி சார் ஷாட் என்று ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அன்புத் தங்கச்சி கீர்த்தி சுரேஷ், படப் பிடிப்புத் தளத்தில் என்னிடம் "அண்ணே இப்படி sooriயொரு பஞ்ச்ச இந்த இடத்தில போடுங்க...'

என்று சொல்லுமள விற்கு வளர்ந்து விட்டார்'' என்று கலகலப்பூட்டினார்.

நடிகர் பிரபு பேசுகையில், ""கமல் பாதையில் என்னுடைய அருமைத் தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார்.

அவருடன் "ராவணா', "கந்தசாமி' அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்.

அவருடன் நடிக்கும்போது நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவெனில், அவர் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்'' என்று விக்ரமை புகழ்ந்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ""இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த "நடிகையர் திலகம்' படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்தப் படத்தில் நடைபெற்ற பல சுவாரசியமான சம்பவங்களை படத்தின் வெற்றி விழாவில் பகிர்ந்து கொள்கி றேன்'' என்றார்.

Advertisment

audiorelease

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ""ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போதுதான் எனக்கு ரசிகை யாகியிருக்கிறார். ஆனால் அவர் நடித்த "காக்காமுட்டை' பார்த்துவிட்டு அவருக்கு நான் ரசிகையாகியிருக்கி றேன்'' என்று ஐஸ்வர்யா ராஜேஷை மனம் திறந்து பாராட்டினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe