நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்கிற படங்களைத் தேர்வுசெய்து நடித்துவரு கிறார் நித்யா மேனன். தனக்கு நான்கு மொழிகள் தெரியும் என்பதால், நடிக்கும் எல்லா படங்களிலும் அவரே டப்பிங்கும் பேசிக் கொள்கிறார்.
இப்போது பாலிவுட் சினிமா வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்நிலையில், புதிதாக பாடகி என்ற புதிய அவதாரத்தை நித்யா மேனன் எடுத்திருக்கிறார்.
""சிறுவயதில் இருந்தே எனக்கு பாடுவதென் றால் அவ்வளவு பிடிக்கும். அது இன்று இசை ஆல்பம்வரை வந்திருப்பது ஆச்சர் யம்தான். கூடிய சீக் கிரமே எனது பாடல் ஆல்பத்தை வெளியிட இருக்கிறேன்'' என்று நித்யா அறிவித் திருக்கிறார். நடிப்பு பற்றிப் பேசியிருக் கும் அவர், வித்தியாச மான கதாபாத்திரங் களைத் தேடித்தேடி நடிக்கவேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் இருக்கிறது. வெறும் இரண்டு பாட்டுக்கு வந்து போகும் நடிகையாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கிறது. அப்படி வந்தால் இப்போ தெல்லாம் ரசிகர்களே ஓரங் கட்டுகிறார்கள். நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல், இயக்குநர் ஆகும் எண்ணமும் இருக்கிறது. அதையும் ஒரு கை பார்த்துவிடுவேன்'' என்கிறார்.