Advertisment

ஸ்ருதியின் புது வேஷம்!

/idhalgal/cinikkuttu/new-guy-shruti

sruthiபுகழ்பெற்ற இயக்குனர் மகேஷ் பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட புதிய படத்தை இயக்கிவருகிறார்.

Advertisment

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்யுத் ஜமால் நாய

sruthiபுகழ்பெற்ற இயக்குனர் மகேஷ் பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாகக் கொண்ட புதிய படத்தை இயக்கிவருகிறார்.

Advertisment

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்துமுடிந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கவுள்ளது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் வர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கதாபாத்திரங்களும் மைந்திருக்கும். இதனால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்துப் பேசிய இயக்குனர், ""அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

Advertisment

இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் "சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இதையும் படியுங்கள்
Subscribe