சின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்தவர்கள் வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ்ப் பெண்ணான இவரின் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/newsactress.jpg)
இவர் இப்போது மலையாளத் தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத் தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தி யும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். படத்தை மதுசூதனன் இயக்குகிறார்.
அதேபோல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ்.
பெரிய திரைக்கு வந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யா கணேஷ் புதிய தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ் ஃபீல்டில் மார்க்கெட்டை ஸ்டெடியாக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் "ஸ்கெட்ச்' போட்டு வருகிறார் திவ்யா கணேஷ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/newsactress-t.jpg)