"ஹிப்பி' என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி (பெயரே ஒரு டைப்பா இருக்கே). ஹரீஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த "தனுசு ராசி நேயர்களே' படம் கடந்த 6-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது.

Advertisment

டிகன்கனா சூரியவன்ஷி என்ன சொல்ல வர்றாருன்னா... "தனுசு ராசி நேயர்களே' எனக்கு முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வுசெய்து நடிக்க வைத்திருக்கிறார். என்மீது மிகுந்த நம்பிக்கைவைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

Advertisment

actress

ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம்.

படப்பிடிப்புக்கிடையே எனக்கும் அவருக்கும் எந்தவொரு சிறு பிணக்கும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு மொத்தமும் மிக இனிமையாகக் கழிந்தது. ரெபா மோனிகா ஜானுடன் எனக்கு படத்தில் மிகச் சில காட்சிகள் மட்டுமே உண்டு. இனிமையான பெண்மணியான இவருடன் படப்பிடிப்பின் இடையே கிடைக் கும் நேரத்தில் அரட்டை அடிப்பதுண்டு. மொத்தத்தில் இப்படத்தில் நடித்த நடிக- நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள்.''